தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மதுரை ரவுடி கொலை வழக்கில் இருவர் கைது

 மதுரை ரவுடி கொலை வழக்கில் இருவர் கைது

 மதுரை ரவுடி கொலை வழக்கில் இருவர் கைது


ADDED : ஏப் 15, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:சிறையில் கிடைத்த நண்பரை பார்க்க விருதுநகருக்கு வந்த மதுரை பெருங்குடியைச் சேர்ந்த ரவுடி முத்துராமன் 52, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சபரீஷ் 29, சங்கரை 32, சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இவர் கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருந்த போது விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. சிறையில் வெளி வந்த முத்துராமன், தன்னுடன் சிறையில் இருந்த நண்பரை பார்க்க சூலக்கரை வந்தார்.

அப்போது முத்துராமனை பின் தொடர்ந்த கும்பல், சிவகாசி ரோட்டில் பழைய பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு அருகே ஓடையில் வைத்து அவரை வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் சபரீஷ், சங்கர் ஆகியோரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us