நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி; சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் 33.
மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்த இவர் மூன்று நாட்களுக்கு முன் கடன் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனந்த் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி கிழக்கு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். உதயகுமார், சந்தனமாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.