/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் ஒரே நாளில் கல்லுாரி மாணவர்கள் இருவர் தற்கொலை
/
ஸ்ரீவி.,யில் ஒரே நாளில் கல்லுாரி மாணவர்கள் இருவர் தற்கொலை
ஸ்ரீவி.,யில் ஒரே நாளில் கல்லுாரி மாணவர்கள் இருவர் தற்கொலை
ஸ்ரீவி.,யில் ஒரே நாளில் கல்லுாரி மாணவர்கள் இருவர் தற்கொலை
ADDED : பிப் 12, 2024 11:33 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மஞ்சுநாத் 20, மாணவி கோதிவாரி பள்ளி அகிலா 19, இருவரும் அவரவர் விடுதி அறைகளில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் நரேசபுரத்தைச் சேர்ந்த நரேந்திரா என்பவரின் மகன் மஞ்சுநாத் 20. ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் பல்கலை விடுதியில் தங்கி பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களாக கல்லூரிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகியிருந்தார். நேற்று காலை விடுதிக்கு வந்த அவர் தனது அறையில் தங்காமல், தனது நண்பர்கள் அறையில் தங்கினார். சக மாணவர்கள் நேற்று காலை வகுப்புக்கு சென்றுவிட்டு, காலை 11:30 மணிக்கு அறைக்கு வந்த போது மஞ்சுநாத், அறையில் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதே ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புள்ளகுர்லாபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபாலப்பா என்பவர் மகள் கோதிவாரி பள்ளி அகிலா 19. அதே பல்கலையில் பெண்கள் விடுதியில் தங்கி எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் நேற்று வகுப்புக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். வகுப்பு முடிந்து சக மாணவிகள் அறைக்கு வந்து பார்த்தபோது, உள்பக்கமாக பூட்டப்பட்டு கோதிவாரி பள்ளி அகிலா, பேனில் தூக்கிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணன்கோவில் போலீசார் இருவரது உடலையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நேரத்தில் ஒரே மாநிலம், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரும், மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து விருதுநகர் ஏ. டி. எஸ். பி. சூரிய பிரகாஷ் நேரில் விசாரணை நடத்தினார்.