/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிணற்றில் விழுந்து இருவர் தற்கொலை
/
கிணற்றில் விழுந்து இருவர் தற்கொலை
ADDED : பிப் 07, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியில் இரு வேறு சம்பவங்களில் இருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.
மல்லியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் மனைவி மஞ்சுளா 52, இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அப்பகுதி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு சம்பவம்: மல்லி பழையபட்டியைச் சேர்ந்தவர் முருகன் 50, பட்டாசு ஆலை தொழிலாளி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.