/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்குள் இரு காவலாளிகள் கொலை: கொள்ளை முயற்சியை தடுத்த போது நடந்த கொடூரம்
/
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்குள் இரு காவலாளிகள் கொலை: கொள்ளை முயற்சியை தடுத்த போது நடந்த கொடூரம்
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்குள் இரு காவலாளிகள் கொலை: கொள்ளை முயற்சியை தடுத்த போது நடந்த கொடூரம்
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்குள் இரு காவலாளிகள் கொலை: கொள்ளை முயற்சியை தடுத்த போது நடந்த கொடூரம்
ADDED : நவ 11, 2025 11:41 PM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்குள் கொள்ளை முயற்சியை தடுத்த காவலாளிகள் பேச்சிமுத்து 50, சங்கரபாண்டியன் 65, மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப் பட்டனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. நுாற்றாண்டு கால பழமைவாய்ந்த இக்கோயில் தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாயமாக போற்றப்படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயிலில் நேற்று முன் தினம் இரவு பணியில் காவலாளிகள் அப்பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து 50, சங்கரபாண்டியன் 65, பணிபுரிந்தனர். நேற்று பகல் நேர காவலாளி மாடசாமி 65, காலை 6:45 மணிக்கு கோயிலுக்கு சென்றபோது காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
கோயிலுக்குள் இருந்த 'சிசிடிவி' கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு கேமரா பதிவு டி.வி.ஆர்., கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையில் எஸ்.பி., கண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்தை ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் கோயிலில்இருந்த தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் ஆதன் வரவழைக்கப்பட்டு கோயில் தெப்பம் அருகில் உள்ள மெயின் ரோடு வரை ஓடி
தொடர்ச்சி 4ம் பக்கம்
சென்று நின்றது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. கோயிலில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றதை தடுத்த காவலாளிகளை வெட்டி படுகொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
எஸ்.பி., கண்ணன் கூறியதாவது: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் நடந்த உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற போது இரு காவலாளிகள் கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோயிலில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை சேதப்படுத்தியிருந்தாலும் சில கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோளம். ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர் என்றார்.
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் காவாலாளிகள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரம் அருகே கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை மாநகராட்சி 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி யிருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாது காப்பற்ற சூழல் இருக்க தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது. ஆளத் தெரியாமல் ஒருசில அதிகாரிகளின் கைப் பாவையாகி காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.
- பழனிசாமி அ.தி.மு.க., பொதுச் செயலர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலிலேயே இப்படி ஒரு கொடூர குற்றம் நிகழ்ந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. தமிழகத்தில் கோயில் சிலைகள் சேதத்தில் துவங்கி உயிரை பறித்து கோயில் உண்டியல் பணத்தை திருடும் துணிகரம் வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இதைப் பார்க்கையில் தி.மு.க., அரசின் தொடர் ஹிந்து விரோதமும் கோயில் பராமரிப்பில் காட்டும் மெத்தனமும் தான் இதுபோன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களின் மத நம்பிக்கைகளையும் சட்டம் - ஒழுங்கையும் ஒருசேர தாக்கிய இந்த கொடூர குற்ற வழக்கில் வழக்கம் போல கண்துடைப்பு விசாரணையில் ஏவல் துறை ஈடபடக் கூடாது.
- நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவர்

