UPDATED : செப் 02, 2026 05:26 PM
ADDED : செப் 02, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:காரியாபட்டி இலுப்பைகுளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் 55.
நேற்று முன்தினம் மாலை 5 :00 மணிக்கு அ. முக்குளம் அருகே டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட்டில் பஸ் நுழையும் இடத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு 60 வயது மதிக்க தக்க ஒருவர் உட்கார்ந்திருந்தார். அப்போது மதுரையில் இருந்து வந்த டவுன் பஸ் திரும்பும் போது பின் டயர் அவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பஸ்சை டிரைவர் ஹரி பாஸ்கர் ஓட்டினார்.
