/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலர் - லாரி மோதல் ஸ்ரீவி.,யில் இருவர் பலி
/
டூவீலர் - லாரி மோதல் ஸ்ரீவி.,யில் இருவர் பலி
ADDED : செப் 02, 2025 05:26 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாயத்தேவன்பட்டியில் டிப்பர் லாரி மோதியதில் டூ வீலரில் லிப்ட் கேட்டு வந்த பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மாயதேவன்பட்டியை சேர்ந்தவர்கள் சக்திவேல் 58, சீனியம்மாள் 65. பட்டாசு ஆலை தொழிலாளிகள். நேற்று மதியம் 12:00 மணிக்கு சக்திவேல் கிராமத்தில் இருந்து டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துார் புறப்பட்டுள்ளார். அப்போது சீனியம்மாளும் லிப்ட் கேட்டு அதே டூவீலரில் பின்னால் உட்கார்ந்து பயணித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்துார் மெயின் ரோட்டிற்கு வரும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலரில் இடித்ததில் இருவரும், லாரியின் பின் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மல்லி போலீசார் விசாரித்தனர்.