/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2500 கிலோ குட்கா பறிமுதல் வழக்கில் மேலும் இருவர் கைது * ரூ. 29 லட்சம் ,கார் பறிமுதல்

ADDED : ஜூன் 18, 2025 10:24 PM

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 2500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேரை கைது செய்த போலீசார் சென்னையை சேர்ந்த கற்குவேல், 29, கனகலிங்கம், 30, ஆகிய மேலும் இருவரை கைது செய்து ரூ. 29 லட்சம் , கார் ,10 க்கும் மேற்பட்ட அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி அருகே தமிழ்பாடியில் 2 நாட்களுக்கு முன் இரவு சிறப்பு படை டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆட்டோ அதன் பின்னால் வந்த காரையும் பிடித்து விசாரணை செய்ததில் அதில் 2500 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. போலீசார் வாகனங்களையும் குட்காவையும் பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த வடக்கு நத்தம் ராஜபூபதி, தொப்புலாகரை அண்ணாமலை, பொம்ம நாயக்கன்பட்டி ராஜகோபால், செம்பட்டி முருகேசன் ஆகிய நால்வரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் மூலம் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த சென்னையை சேர்ந்த கற்குவேல், கனகலிங்கம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், ரூ. 29 லட்சம் மற்றும் 10 க்கும் மேற்பட்ட அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.