ADDED : மார் 04, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி அருகே கமுதி செல்லும் ரோட்டில் தபசு மண்டபம் முன்பு 2 இளைஞர்கள் கையில் வாளுடன் நின்று கொண்டிருந்தனர்.
திருச்சுழி போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், திருச்சுழியைச் சேர்ந்த விக்னேஷ், 32, கொக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், 27, என்பதும், இருவரும் சட்ட விரோதமாக வாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்ததும், தனியாக வரும் மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் நோக்கில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையி லடைத்தனர்.
