ADDED : ஏப் 07, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர், பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அமுதவள்ளி, 39. இவர், நேற்று முன்தினம் அதே பகுதி பெண்கள் சிலருடன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றார்.
அப்போது, மீசலுார் விலக்கு அருகே சரவண குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த டூ - வீலர், பாத யாத்திரை சென்ற பெண்கள் மீது மோதியதில், அமுதவள்ளி பலியானார்.
ஹெல்மெட் அணியாமல், டூ - வீலரை ஓட்டி வந்த சரவண குமார், மருத்துவமனையில் உயிர்இழந்தார். அமுதவள்ளியுடன் சென்ற மாரீஸ்வரி, மீனாட்சி, முத்துமாரி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

