/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலையில் விபத்து இருவர் உடல் சிதறி பலி
/
பட்டாசு ஆலையில் விபத்து இருவர் உடல் சிதறி பலி
ADDED : ஜன 25, 2024 01:30 AM

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகே ஆர்.ஆர். நகரில், நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த ஆலையில் நேற்று காலை 9:30 மணிக்கு பட்டாசு தயாரிப்பு பணியில் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து ஏற்பட்டு, அறைகள் தரைமட்டமாகின.
இதில் வீரக்குமார், காளிராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 17, கம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார், 25 காயமடைந்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், சுந்தரமூர்த்தி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 3 லட்சம் ரூபாய்; காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.