/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாஸ்மாக் ஊழியர்களிடம் பணத்தை கொள்ளையடித்த இருவருக்கு 7 ஆண்டு சிறை
/
டாஸ்மாக் ஊழியர்களிடம் பணத்தை கொள்ளையடித்த இருவருக்கு 7 ஆண்டு சிறை
டாஸ்மாக் ஊழியர்களிடம் பணத்தை கொள்ளையடித்த இருவருக்கு 7 ஆண்டு சிறை
டாஸ்மாக் ஊழியர்களிடம் பணத்தை கொள்ளையடித்த இருவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஏப் 06, 2025 08:04 AM
அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் பணத்தை கொள்ளை அடித்த லெட்சுமணன் 24, சதீஷ்குமார் 26, ஆகியோருக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
திருச்சுழி அருகே பள்ளிமடம் டாஸ்மாக் கடையில் பச்சேரியைச் சேர்ந்த மாரியப்பன்,42, முத்து கருப்பன்40, பணி புரிகின்றனர். 2018 ல், பணியை முடித்து விட்டு கமுதி ரோட்டில் பச்சேரி சந்திப்பு அருகில் டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த பச்சேரியை சேர்ந்த லட்சுமணன், சதீஷ்குமார் இருவரும் டூவீலரில் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி 2 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். திருச்சுழி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இவ் வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வன் ஜேசுராஜா பணத்தை கொள்ளையடித்த லட்சுமணன் ,சதீஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.