ADDED : ஏப் 15, 2026 11:27 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:காரியாபட்டி வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்த காளிமுத்து 70, நேற்று அதிகாலை 4:50 மணிக்கு சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற போது, புதுக்கோட்டை மாவட்டம் பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த டூவீலர், சைக்கிளில் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த காளிமுத்து மீது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியது. உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
