ADDED : ஜூன் 25, 2026 10:46 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில் முனீஸ்வரன் 17, வினித் 24, பலியாயினர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் வினித். இவர் தனது டூவீலரில் விருதுநகர் ரோட்டில் சென்ற போது, பேட்டை தெருவை சேர்ந்த முனீஸ்வரன் தனது இரு நண்பர்களை ஏற்றிக் கொண்டு டூவீலரில் வந்து நேருக்கு நேர் மோதினார். இதில் கீழே விழுந்த வினித் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் காயமடைந்தனர். முனீஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
