ADDED : செப் 09, 2026 12:29 AM

அ நிறம் | அளவு
சேத்துார்: விருதுநகர் மாவட்டம் தேவதானம் அருகே இரு டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் மணிகுமார் 21, குணசேகரன் 45, ஆகிய இருவர் பலியாகினர்.
தேவதானம் அருகே கோவிலுாரை சேர்ந்தவர் மணிகுமார் 21. நேற்று காலை 9:00 மணியளவில் சொக்கநாதன் புத்துார் விலக்கு அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தார்.
கோவிலுார் கருப்பசாமி கோயில் அருகே மணிகுமார் வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த நெல் வியாபாரி குணசேகரன் 45, டூவீலரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது இரு டூவீலர்களும் மோதின.
இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மணிகுமார், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் பலியான இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. விபத்து குறித்து சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
