நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி பேராசிரியர்கள் 25 பேர் இயற்கை வளம் பாதுகாப்பு குறித்து இரண்டு நாள் டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் விருதுநகரில் துவங்கி கேரளாவின் வாகமான் வரை சென்று ஏற்படுத்தினர்.
இந்த ஊர்வலத்தை கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி உபதலைவர்கள் ராஜமோகன், ரம்யா, பொருளாளர் சக்தி பாபு, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள பகுதிகளில் இயற்கை வளம் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கல், விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர்.

