ADDED : மே 06, 2025 05:52 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் 26, இவர் மார்ச் 11 அன்று ரூ. 1 லட்சம் மதிப்புள்ள டூவீலரை புதிதாக வாங்கியுள்ளார்.
ஏப்ரல் 30 காலை பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை காணவில்லை. கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த அய்யனார் 27 என்பவரை கைது செய்து டூவீலரை மீட்டனர்.
