/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரத்தில் ஆட்டோ மோதி இரு தொழிலாளிகள் சாவு
/
மரத்தில் ஆட்டோ மோதி இரு தொழிலாளிகள் சாவு
ADDED : ஜூலை 28, 2025 03:12 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:புளியமரத்தில் மினி லோடு ஆட்டோ மோதி, இரு தொழிலாளர்கள் பலியாகினர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லுார் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 41. ராஜபாளையத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன், 29. முகவூரை சேர்ந்தவர் அர்ஜுன், 21. இவர்கள், ராஜபாளையத்தில் உள்ள ஒரு விளம்பர பிளக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
மூவரும், நேற்று முன்தினம் இரவு, விருதுநகரில் உள்ள ஒரு கார் விற்பனை மையத்தில் பிளக்ஸ் பேனர் கட்ட, மினி லோடு ஆட்டோவில் சென்றனர். வேலை முடிந்து, ராஜபாளையம் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை அர்ஜுன் ஓட்டினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்துார், இந்திராநகர் அருகே வந்த போது, புளிய மரத்தில் ஆட்டோ மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துமனையில் காளீஸ்வரன் இறந்தார். அர்ஜுன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.