ADDED : ஏப் 14, 2025 04:50 AM
விருதுநகர்: விருதுநகரில் வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாசபை சார்பில் மாவட்ட தலைவர் நஸீர் அஹ்மது தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
எம்.பி., மாணிக்கம் தாகூர் பேசுகையில், வக்ப் திருத்த சட்ட மசோதாவுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்களித்தார். அதை மன்னிக்க முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான இச்சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.
இன்று முஸ்லிம்களுக்கு நடந்தது நாளை கிறிஸ்தவர்களுக்கும், நாடார்களுக்கும் நடக்கும். சமூக இடங்களை வைத்து நல்லது செய்பவர்களிடம் இருந்து அவற்றை பறிப்பதை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தனது கொள்கையாக வைத்துள்ளது'', என்றார். எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன் உட்பட சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

