/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நோய் தொற்று கேந்திரங்களாக மாறிவரும் நிழற் குடைகள்; பராமரிக்க எதிர்பார்ப்பு

UPDATED : ஜூலை 24, 2025 07:52 AM
ADDED : ஜூலை 24, 2025 06:26 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று பகுதியில் பயணிகள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட நிழற்குடைகள் நோய் பரப்பும் இடமாக மாறி வருவதை உள்ளாட்சி நிர்வாகங்கள் பராமரிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் சுற்று பகுதி பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் வசதிக்காக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் சார்பில் தேவையான இடங்களில் நிழற் குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 20க்கும் அதிகமானவை தற்போது செயல்பாட்டில் உள்ளன.
தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உபயோகிக்கும் இந்த நிழற்குடைகளை முறையாக பராமரிப்பு செய்வது இல்லை. சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள நிழற்குடையில் குப்பை கழிவுகள் சேர்ந்தும், திறந்தவெளி பாராகவும், பகல் நேரங்களிலும் குடிமகன்கள், மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்றோர் ஆக்கிரமித்து கிடப்பதும் நடைமுறையில் உள்ளது. இதனால் இவற்றை உபயோகப்படுத்தும் குழந்தைகள், முதியோர், பெண்கள் நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே நிழற்குடைகளை துாய்மையாக பராமரிக்கவும் ஆக்கிரமிப்பை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.