/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரம்
/
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரம்
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரம்
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 27, 2025 03:50 AM

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 35 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் 2024 ல், 297.25 கோடி நிதியில் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக புறநகர் பகுதிகளான கணேஷ் நகர், அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடந்தது. ஒவ்வொரு தெருவிலும் மேன்ஹோல் அமைக்கும் பணியும் கழிவுநீர் வெளியேற்றும் சம்ப் தொட்டிகள் கட்டும் பணிகளும் செய்யப்பட்டது.
சுக்கிலநத்தம் ரோட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வெளியேறும் நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் ட்ரீட்மென்ட் பிளான்டில் சேகரம் செய்வதற்கான மெகா தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் முக்கிய நகரின் முக்கிய சந்திப்புகளில் கலெக்சன் தொட்டி பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதில் கழிவுநீர் பம்பு செய்யப்பட்டு பின்னர் மெயின் பகிர்மான குழாய் வழியாக கழிவுநீர் குப்பை கிடங்கில் உள்ள தொட்டிகளில் சேகரிக்கப்படும். குப்பை கிடங்கில் தொட்டி அமைக்கும் பணிகள் 15 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.