ADDED : மார் 18, 2026 05:36 AM
சிவகாசி: தேர்தல் பறக்கும் படை அதிகாரி சத்யராஜ் தலைமையிலான குழுவினர் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்த மதுரையைச் சேர்ந்த ஜவகரிடம் சோதனை செய்கையில், சிவகாசியில் தான் வாங்கிய அரிசிக்கு நிலுவைத் தொகையை கொடுப்பதற்காக உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்திருந்த ரூ.1.98 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் முத்து அபிஷேகம் தலைமையிலான குழுவினர் சிவகாசியை சேர்ந்த சபரிநாதன் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக உரிய ஆவணம் இன்றி ரூ 68 ஆயிரம் வைத்திருந்தார். அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
*சாத்துார் அச்சங்குளத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் கண்காணிப்பு குழுவினர் அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ 1.20 லட்சத்தை கைப்பற்றினர்.
காரில் வந்த குஜராத்தை சேர்ந்த பத்ரேஷ் குமார், தான் குஜராத்தில் பட்டாசு கடை வைத்திருப்பதாகவும் பட்டாசு வாங்குவதற்காக பணம் எடுத்து வந்ததாக கூறியுள்ளார். பணத்தை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. கனகராஜிடம் ஒப்படைத்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
