தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சாத்துார் நகராட்சியில் செயல்படாமல் கிடக்கும் குப்பை பிரிக்கும் இயந்திரம் தேங்குவதால் சிக்கல்

சாத்துார் நகராட்சியில் செயல்படாமல் கிடக்கும் குப்பை பிரிக்கும் இயந்திரம் தேங்குவதால் சிக்கல்

சாத்துார் நகராட்சியில் செயல்படாமல் கிடக்கும் குப்பை பிரிக்கும் இயந்திரம் தேங்குவதால் சிக்கல்


UPDATED : அக் 12, 2026 06:02 PM

ADDED : அக் 12, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:02 PM ADDED : அக் 12, 2026 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பை பிரிக்கும் இயந்திரம் செயல்படாமல் உள்ளதால் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டு குப்பைகள் அதிக அளவில் தேங்கி வருகின்றன. அவற்றில் தீ வைப்பதால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

சாத்துார் நகராட்சியில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருகின்றன. நகர் பகுதியில் அதிகாலை 5:00 மணி முதல் துப்புரவு பணியாளர்கள் நகர் பகுதி முழுவதும் சுத்தம் செய்வதோடு கடைகளுக்கு வரும் வைக்கப்பட்டுள்ள குப்பைகளை சேகரித்து லாரிகளில் கொண்டு சென்று நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

நகராட்சி குப்பை கிடங்கில் 3 யூனிட் உரம் தயாரிக்கும் இயந்திரமும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் இயந்திரமும் உள்ளன. இவற்றுடன் நகர் பகுதியில் சேகரித்து கொண்டு வரப்படும் குப்பை அனைத்தையும் மக்கும், மக்காத குப்பை என இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றும் உள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் துப்புரவு பணியாளர்கள் எளிதாக மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இயந்திர கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரம் பழுதானது.

இதனால் துப்புரவு பணியாளர்கள் தற்போது கைகளால் குப்பைகளை பிரித்து எடுத்து உரம் தயாரித்து வருகின்றனர். நகராட்சி குப்பை கிடங்கில் இதனால் நாளுக்கு நாள் குப்பை அதிக அளவில் குவிந்து வருகின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து பொருட்களை சேகரிக்க வருபவர்கள் குப்பைகளில் உள்ள காப்பர் கம்பிகளை பிரிப்பதற்கு குப்பைகளுக்கு தீ இட்டு வருவதால் இதன் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகையால் அவதிப்படும் நிலை உள்ளது.

எனவே நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள குப்பை பிரிக்கும் இயந்திர் பழுதை சரி செய்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us