/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பராமரிப்பில்லா ரயில் பெட்டி அவசர கால ஜன்னல்
/
பராமரிப்பில்லா ரயில் பெட்டி அவசர கால ஜன்னல்
ADDED : ஏப் 13, 2025 04:17 AM
ராஜபாளையம் : ரயில்வே பயன்பாட்டில் உள்ள ஐ.சி.எப் வகையிலான பழைய ரயில் பெட்டிகளில் அவசர கால ஜன்னல்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சிக்கல் ஏற்படுகிறது. முறையாக பராமரிக்க ரயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ரயில்வேயில் இரண்டு வகையான ரயில் பெட்டிகள் நடைமுறையில் உள்ளது. பயணிகளுக்கான பழைய ஐ.சி.எப் பெட்டிகள், புதிய வகை எல்.எச்.பி பெட்டிகள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
பழைய முறையிலான ஐ.சி.எப் பெட்டிகளில் பயணிகளுக்கான அவசர ஆபத்து காலங்களில் ரயில் பெட்டிகளில் இருந்து அதிவிரைவாக வெளியேற ரயில் பெட்டி ஒன்றுக்கு நான்கு ஜன்னல்கள் அவசர கால வழிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதத்தில் பெட்டியில் உள்ளேயும் வெளியேயும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும். இவ்வகை ஜன்னல்களில் நிரந்தர கம்பிகள் இல்லாமல் வெட்ட வெளியாக இருக்கும்.
இதில் ஜன்னல் கம்பிகளுக்கு பதிலாக மேலே துாக்கி இறக்கும் வண்ணம் கிரில் வகை கதவுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பராமரிப்பு குறைபாட்டாலும் அவசர கால ஜன்னல் கம்பிகள் மேலே ஏற்ற இறக்க முடியாதவாறு இறுக்கமாக மாறிவிடுகிறது.
விபத்து காலத்தில் இந்த அவசர ஜன்னல்களை நம்பி பயணிக்க முடியுமா என்ற அச்சம் பயணிகளிடையே எழுந்துள்ளது. சில ஜன்னல்களை பயணிகள் மேலே உயர்த்திய நிலையில் இடையூறு ஏற்பட்டு பயணிக்கும் போது திடீரென கீழே விழும் சம்பவங்களும் இதனால் காயங்களும் ஏற்படுகின்றன.
இது குறித்து ராஜபாளையம் ரயில் பயணாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன்:
ஏசி இல்லாத பெட்டிகளில் இது போன்ற நிலையே ஜன்னல்களில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளுக்கும், ஷட்டர் கதவுகளுக்கும் உள்ளன.
மழை, பனி, குளிர் நேரங்களில் இதை மூட முடியாமலும் வெயில் நேரங்களை திறக்க முடியாமலும் இருப்பதால் பயணிகளுக்கு பெரும் சங்கடம் ஏற்படுகிறது. தென்னக ரயில்வே நிர்வாகம் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.