ADDED : ஏப் 05, 2026 05:13 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியின் அம்பேத்கர் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்களுக்காக 2023 - 2024ல் ரூ.7.85 லட்சத்தில் புதிதாக சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
ஆனால் ஓராண்டு கடந்தும் இதுவரை திறக்கப்பட்டு முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் திறந்த வெளி கழிவறைகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
