/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சித்த மருத்துவ பிரிவு மருந்தாளுனர் பணியிடங்களில் தற்காலிகமாக நியமனம் நிரந்தரமாக்க வலியுறுத்தல்

ADDED : டிச 20, 2024 01:43 AM
விருதுநகர்:அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் மருந்தாளுனர் பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தற்காலிகமாக நிரப்பப்படுகிறது. இவர்களை நிரந்தமாக்க வேண்டுமென பணியாளர்கள் விரும்புகின்றனர்.
தமிழக அரசு சித்த மருத்துவக்கல்லுாரிகளில் டிப்ளமோ படிப்புகள் முடித்தவர்கள் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் நிரந்தர மருந்தாளுனராக நியமிக்கப்படுவது வழக்கம்.
மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி மூலம் நியமிக்கப்பட்டனர்.
இந்த பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தற்காலிகமாக நிரப்பப்படுகிறது.
அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் எம்.ஆர்.பி., மூலம் நிரந்தரமாக மருந்தாளுனர்கள் நியமிக்கப்படும் நிலையில் சித்த மருத்துவத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக ஊழியர்கள் குமுறுகின்றனர்.
மேலும் ஊதியமும் குறைவு. பெரும்பாலும் பிற மாவட்டங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.
எனவே தமிழக அரசு சித்த மருத்துவத்தில் மருந்தாளுனர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டுமென ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.