UPDATED : நவ 28, 2026 12:07 AM
ADDED : நவ 28, 2026 12:07 AM
ராஜபாளையம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மேலப்பாட்ட கரிசல் குளம் ஊராட்சி மருது நகரில் ஜல் ஜீவன் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல் குளம் ஊராட்சி மருது நகரில் ஜல்ஜீவன் திட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து நமது தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதனை அடுத்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக புதிய போர்வெல் பைப்லைன் அமைக்க கிராம ஊராட்சி நிதியில் இருந்து ரூ.6.69 லட்சம் நிதி ஒதுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் காட்சி பொருளாக இருந்து வந்த மேல்நிலை தேக்க நீர் தொட்டி செயல்பாட்டிற்கு வர உள்ளது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
