/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட நிலை அலுவலர்களில் காலிப்பணியிடங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்
/
மாவட்ட நிலை அலுவலர்களில் காலிப்பணியிடங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்
மாவட்ட நிலை அலுவலர்களில் காலிப்பணியிடங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்
மாவட்ட நிலை அலுவலர்களில் காலிப்பணியிடங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்
ADDED : ஆக 13, 2025 02:04 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிலை அலுவலர்கள் சில துறைகளில் காலியாக உள்ளதால் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற் பட்டுள்ளது.
மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் கனகராஜ், பணியிடமாறுதலாகி சாத்துார் ஆர்.டி.ஓ., பதவி உயர்வில் உள்ளார். இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பால் பாண்டி கூடுதல் பொறுப்பு வகித்தார். அவரும் தற்போது விடுப்பில் சென்று விட்டார். இதனால் உதவி அலுவலர் தான் பொறுப்பு பார்க்கிறார்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை தொடர்பான திட்டங்களில் சுணக்கம் நீடிக்கிறது. விண்ணப்பிப்போருக்கு தாமதம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதே போல் மற்றொரு முக்கிய பணியிடமான மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொறுப்பில்சீனிவாசன் பதவி வகித்தார். அவர் தற்போதுதாலுகா சப்ளை அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை தாசில்தார் லோகநாதன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு கூட்டங்கள் நடத்த இருப்பதால் அப்பணியிடத்தின் தேவையும் மிக அதிகமாக உள்ளது. அதே போல்ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணியாற்றிய அரவிந்த் இடமாறுதலாகி சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக உள்ளார். பல மாதங்களாக இப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஒன்றிய அளவிலான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பணியிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே காலியாக தான் உள்ளது. திருச்சுழி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கூடுதல் பொறுப்பு பார்க்கிறார். இதனால் அங்கன்வாடிகளில் தேவையான வசதிகளை மேம்படுத்துவது, அங்கு வரவேண்டிய புதிய திட்டங்களை முழுமைப்படுத்துவதிலும் தாமதம் தொடர்கிறது. எனவே கலெக்டர் காலியாக உள்ள மாவட்ட நிலை பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும்.

