/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைகாசி பொங்கல் விழா அக்னி சட்டி நேர்த்திக்கடன்
/
வைகாசி பொங்கல் விழா அக்னி சட்டி நேர்த்திக்கடன்
ADDED : ஜூன் 05, 2025 12:50 AM

விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் நகர்வலம் வந்து கோவில் திடலில் அருளாசி வழங்கினார். நேற்று முன்தினம் நடந்த பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து கோவில் திடலில் மண்டபத்தில் அமர்ந்து அருளாசி வழங்கினார்.
நேற்று காலை முதல் பக்தர்கள் கயிறுகுத்து, அக்னிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், உருமாறி பல வேடங்கள் அணிந்து வருதல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை அம்மனுக்கு செலுத்தினார்கள். இன்று மாலை 4:36 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.