/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
ADDED : ஏப் 26, 2025 02:55 AM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் சூரம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கரைமேலு 45, கைது செய்யப்பட்டார்.
மல்லாங்கிணர் சூரம்பட்டியைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் சூர்யகுமார் 25. இவரது அப்பாவின் பெயரிலுள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய மல்லாங்கிணர் வி.ஏ.ஓ., கரைமேலுவை அணுகினார். அதற்கு ரூ .6 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். ரூ. 3 ஆயிரத்து 500 தருவதாக கூறினார்.
எனினும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். நேற்று மாலை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அவரிடம் பணத்தை சூர்யகுமார் கொடுத்த போது அதை வாங்கிய வி.ஏ.ஓ.,வை ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

