/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்
/
கொலை வழக்கில் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம்ஆஜர்
ADDED : மே 01, 2025 01:12 AM

விருதுநகர்:கூட்டாளி கொலை வழக்கில் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார்.
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில்குமாரை 38, ஒரு கும்பல் சுட்டுக் கொன்று, உடலை துண்டுதுண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில்குமார் மனைவி 2021ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே இக்கொலை வழக்கில் தனிப்படை போலீசார் வரிச்சியூர் செல்வத்தை 2023 ஜூன் 21ல் கைது செய்தனர். விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் வரிச்சியூர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் நேரிலும், புழல் சிறையில் உள்ள லோகேஷ் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் ஆஜராகினர். அப்போது இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விசாரணை தடைபட்டது. சிறிது நேரம் கழித்து விசாரித்த நீதித்துறை நடுவர் ஐயப்பன் , விசாரணையை மே 9க்கு ஒத்திவைத்தார்.