ADDED : செப் 13, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் பிரசித்தி பெற்ற புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கு அதிகாலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன.
கொடி மரத்திற்கும் மூலவருக்கும் பல்வேறு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
மாலை 6:30 மணிக்கு அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
