/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீரசோழன் கிருதுமால் நதியில் சாக்கு பைகளில் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
வீரசோழன் கிருதுமால் நதியில் சாக்கு பைகளில் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வீரசோழன் கிருதுமால் நதியில் சாக்கு பைகளில் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வீரசோழன் கிருதுமால் நதியில் சாக்கு பைகளில் மணல் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : நவ 18, 2025 03:49 AM

நரிக்குடி: நரிக்குடி வீரசோழன் கிருதுமால் நதியில் மணல் திருட்டில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அதிகரித்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நரிக்குடி வீரசோழனின் பகுதியில் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. மணல் தட்டுப்பாடு நிலவி வருவதால் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மணல் கலந்து கட்டும் கட்டுமானம் உறுதி தன்மையாக இருப்பதாக நம்பப்படுகிறது. மணல் அதிக விலை கொடுத்தாலும் கிடைப்பது அரிதாக இருந்து வருகிறது. இந்நிலையில் நூதன முறையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் லாரிகள், மாட்டு வண்டிகளில் திருடப்படுகின்றன.
இதை அதிகாரிகள் உடனடியாக கண்டறிவதால் இதற்கு பயந்து லாரிகளில், மாட்டு வண்டிகளை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவது கிடையாது. மாற்று ஏற்பாடாக ஆங்காங்கே உள்ள ஆறுகளில் பெண்கள் சிமென்ட் சாக்குகளில் திருடி விற்பனை செய்கின்றனர். ஒரு மூடை மணல் ரூ.50 முதல் 100 வரை விற்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் பெண்கள் 2, 3, பேர் கூட்டு சேர்ந்து சாக்குகளில் திருடி விற்பனை செய்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கில் 3 மணி நேரத்தில் சம்பாதிக்கின்றனர். இதனால் பலரும் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர். பலமுறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பெண்கள் அதிகமாக திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

