/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வாகனம் தயார்
/
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வாகனம் தயார்
ADDED : ஜூன் 27, 2025 12:32 AM

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கு நாய்களைப் பிடிக்க அதற்குரிய வாகனம் தயார் நிலையில் உள்ளது.
அருப்புக்கோட்டையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் கடிபட்டு பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது. நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தும் பயனில்லை.
இந்நிலையில், நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கு உரிய பணிகளை அரசு முடிக்கி விட்டுள்ளது. இதன்படி அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள நகராட்சி மயானத்தில் நாய்களை கருத்தடை செய்ய தனியாக அறை கட்டப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி மற்றும் அறுவை சிகிச்சைகள் தேவையான கருவிகள் மற்றும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் தெருநாய்களை பிடித்து வர அதற்கென தனியான கட்டமைப்புகளுடன் கூடிய வாகனம் தயாராக நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 6 நாய்களை பிடிக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது விரைவில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.