/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
/
வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 25, 2025 07:00 AM
திருச்சுழி : திருச்சுழி பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பாக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
தமிழக நெடுஞ்சாலை துறையின் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த பணி கடைசியாக 2020 ம் ஆண்டில் நடந்தது. தற்போது 2025 ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் துவங்கின. திருச்சுழி, நரிக்குடி, கட்டனூர், திருப்புவனம் உள்ளிட்ட 33 சாலைகளில் கணக்கு எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கணக்கெடுப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் சாலைகளை அகலப்படுத்தவும், மேம்படுத்தவோ செய்ய முடியும்.
இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ்குமார் சாலையை பயன்படுத்தி வரும் வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.