தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்டாப்பிங்

வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்டாப்பிங்

வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்டாப்பிங்


ADDED : ஆக 21, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மான்ராஜ் எம்.எல்.ஏ.மனு அனுப்பி யுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது; எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் இயக்க பட்ட நாள் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப் படவில்லை. கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும், டெல்டா மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஆண்டாள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த மக்களும், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், பட்டுக்கோட்டை நகரங்களுக்கும், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கும் அதிகளவில் பயணித்து வருகின்றனர்.

இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்காததால் ராஜபாளையம் அல்லது சிவகாசி சென்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வழித்தடத்தில் இரு மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us