தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடுகள் படுமோசம்; விபத்து காலங்களில் மீட்பு பணிக்கு சிக்கல்

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடுகள் படுமோசம்; விபத்து காலங்களில் மீட்பு பணிக்கு சிக்கல்

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடுகள் படுமோசம்; விபத்து காலங்களில் மீட்பு பணிக்கு சிக்கல்


UPDATED : மார் 28, 2025 07:29 AM

ADDED : மார் 28, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2025 07:29 AM ADDED : மார் 28, 2025 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் மெயின் ரோட்டில் இருந்து விலகி நகருக்கு வெளியே காட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளன. சிவகாசி பகுதியில் நாரணாபுரம், அனுப்பன்குளம், மாரனேரி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளுக்கு செல்ல முறையான ரோடு வசதி இல்லை.

முட்புதர்களுக்கு இடையே சிறிய மண் பாதை மட்டுமே உள்ளது. சிறிய மழை பெய்தாலும் தொழிலாளர்களை ஏற்றி வரும் பட்டாசு ஆலை வாகனமே செல்ல முடியாது. பாதை முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. பட்டாசு ஆலைகளில் எதிர்பாராமல் விபத்து ஏற்படும் காலங்களில் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபதில் சிரமம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் சில பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட போது மழை பெய்து பாதை சகதியாக மாறியதால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முறையான பாதை வசதி இல்லை. மீட்பு பணி தாமதமாகும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே காட்டுப் பகுதிக்குள் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்றார் போல ரோடு வசதியை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us