/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்நடை மருத்துவ பேரவை தலைவர் தேர்வு
/
கால்நடை மருத்துவ பேரவை தலைவர் தேர்வு
ADDED : ஏப் 05, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பேரவைத் தலைவருக்கான தேர்தல் சென்னையில் நடந்தது. டாக்டர் கார்த்திக் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் பேரவைத் தலைவர் சரவணன், அகில இந்திய கால்நடை மருத்துவப் பேரவை உறுப்பினர் தணிகைவேல், உறுப்பினர்கள் ராஜேஷ், ராம்பிரபு, ரஜினிகாந்த், ரவிச்சந்திரன், செந்தில்குமரன், வெங்கட்ராகவன், செல்வகுமார் ஆகியோர் வாழ்த்தினர்.
கால்நடை டாக்டர்களை பதிவு செய்தல், புதுப்பித்தல், போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், அரசுக்கு கால்நடை மருத்துவ கல்வி தொடர்பான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

