ADDED : அக் 19, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் ராஜபாளையம் வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் சார்பில் லவ் ஜிகாத்தை தடை செய்யவும், கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டு வர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேற்று மாலை 6:30 மணிக்கு பஜ்ரங்தள் மாநில இணை அமைப்பாளர் பாலமுருகன் தலைமையில் ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு முயன்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து போலீசார்குவிக்கப்பட்ட நிலையில்ஊர்வலமாக வந்த வி.ஹெச்.பி., தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், மாவட்டச் செயலாளர் ஆனந்த், உள்பட ஹிந்து அமைப்பினர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் தெரிவித்தனர். 19 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

