/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் விதிமீறல்கள்
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் விதிமீறல்கள்
ADDED : ஜன 26, 2026 05:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி.யாக பாலசுந்தரம் பொறுப்பேற்றுள்ள நிலையில் நகரில் நிலவும் பல்வேறு சமூக விரோத செயல்களை முழு அளவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த பாலசுந்தரம் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் காவல்துணை கோட்ட டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.
அன்றைய தினமே மல்லி, கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா உட்பட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் அவர் ஆய்வு செய்தார். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராம பகுதிகளையும் நேரடியாக ஆய்வு செய்து தெரிந்து கொண்டார்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி, பஜார் வீதிகளில் கடைகளை மறைத்து வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் போர்டுகள், அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்பு, மது, கஞ்சா, லாட்டரி விற்பனை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனிம வளம் திருட்டு உட்பட பல்வேறு விதிமீறல்களையும், சமூக விரோத செயல்களையும் தடுக்க டி.எஸ்.பி., கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

