/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல்
/
சிவகாசியில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல்
ADDED : நவ 02, 2024 07:44 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் என்.ஆர்.கே.ஆர்., காலனியில் 10 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விஸ்வநத்தம் என்.ஆர்.கே.ஆர்., காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என 10 பேர் வரை இரு நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். முழுமையாக சரியாகாதவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இப்பகுதியினர் கூறுகையில் ' குடியிருப்புப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை அகற்றப்படவில்லை. இதனாலேயே காய்ச்சல் வந்திருக்கலாம். காலநிலை மாற்றத்தாலும் காய்ச்சல் வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணத்தை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

