தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில்  50.20 மி.மீ., மழை பதிவு

விருதுநகரில்  50.20 மி.மீ., மழை பதிவு

விருதுநகரில்  50.20 மி.மீ., மழை பதிவு


UPDATED : செப் 15, 2026 07:07 PM

ADDED : செப் 15, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 07:07 PM ADDED : செப் 15, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் செப்.,14 பெய்த கனமழையில் 50.20 மி.மீ., மழை பதிவானது.

செப். மாதம் எல் நினோ விளைவு துவங்கும் என இந்தாண்டின் துவக்கத்திலே வானியல் ஆய்வாளர்கள் கூறினர். அதற்கு ஏற்ப கோடை முடிந்தும் அக்னி நட்சத்திரம் தொடர்ந்தது போல் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெப்ப அலை வீசியது. ஜூன் மாத இறுதியில் மழை பெய்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மழை பெய்யவில்லை.

இதனால் மக்கள் வெயிலில் வெளியில் நடமாட முடியாது கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் செப். மாத துவக்கத்திலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று முன் தினம் மாலை மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் ராஜபாளையம் 3 மீ., காரியாபட்டி 9.20 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்துார் 37.80 மி.மீ., கோவிலான்குளம் 7 மி.மீ., வத்திராயிருப்பு 2.20 மி.மீ., அதிகபட்சம் விருதுநகர் 50.20 மி.மீ., என மழை அளவு பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us