ADDED : மார் 26, 2026 07:37 PM
விருதுநகர்: விருதுநகரில் தொகுதி பா.ஜ.,வுக்கு தான் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க., போட்டியிடுவதால் பா.ஜ.,வினர் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் இரு தொகுதிகள் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் ராஜபாளையம், விருதுநகர் என்றும் நாளடைவில் சாத்துார் விருதுநகர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சாத்துார், ராஜபாளையம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 1980க்கு பிறகு அ.தி.மு.க., விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறது.
நேரடியாக தி.மு.க.,வை இப்போது தான் மீண்டும் எதிர்கொள்கிறது. ஆனால் பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டுரங்கனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, தொகுதி மக்களிடம் செல்வாக்கு காரணமாக எளிதில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விருதுநகர் தொகுதி பா.ஜ., வசமிருந்து பறி போனது கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
