/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் இல்லை மருத்துவ சேவைகள் கழகம் அலட்சியம்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் இல்லை மருத்துவ சேவைகள் கழகம் அலட்சியம்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் இல்லை மருத்துவ சேவைகள் கழகம் அலட்சியம்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் இல்லை மருத்துவ சேவைகள் கழகம் அலட்சியம்
ADDED : நவ 07, 2025 03:35 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மூச்சுத் திணறல், ஆஸ்துமா பாதிப்புக்கான சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் கடந்த மூன்று மாதங் களாக கிடைக்கவில்லை. மருத்துவ சேவைகள் கழகம் தேவையை விட குறைவாக மருந்துகளை வழங்குவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் 1276 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு நுரையீரல், சுவாசப் பாதிப்புக்கான வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பாதிப்பை பொறுத்து உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளுக்கு பத்து நாட்கள் வரை மாத்திரை, இன்ஹேலர் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைத்து வழங்கு கின்றனர்.
இதை அரசு மருத்துவ மனை மருந்தகத்தில் நோயாளிகள் பெற்று செல்கின்றனர். இது போன்று ஒவ்வொரு மாதமும் மருந்து, மாத்திரைகள் பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் நோயாளி களின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும், உடல் நலத்திற்கு ஒத்துபோகும் சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை தற்போது டாக்டர்கள் பரிந் துரைக்கின்றனர்.
இந்த சிறப்பு இன்ஹேலர் மருந்து களின் விலை வெளியே ரூ.400 முதல் ரூ.1000 வரை இருப்பதாலும், அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்குவதால் மாவட்டம் முழு வதும் இருந்து மாதத்திற்கு ஒரு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை நோயாளிகள் பெற்று செல்கின்றனர்.
ஆனால் மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து விருது நகர் அரசு மருத்துவ மனைக்கு வழங்கும் மருத்துவ சேவைகள் கழகம் சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை தேவையை விட குறைவாக தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உள், வெளி நோயாளிகளுக்கு சிறப்பு இன்ஹேலர் மருந்து கிடைக்காததால் தனியார் மருந்தகங்களில் அதிக விலை கொடுத்தும் வாங்கும் நிலைக்கு ஆளாகி யுள்ளனர்.
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு மருந்துகளை கொள்முதல் செய்து வழங்குவதில் தொடர்ந்து மருத்துவ சேவைகள் கழகம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை உடனடியாக வழங்க மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

