/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை இன்று முதல் வழங்கல்
/
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை இன்று முதல் வழங்கல்
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை இன்று முதல் வழங்கல்
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை இன்று முதல் வழங்கல்
ADDED : ஜன 30, 2025 04:48 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நகராட்சி மூலம் இன்று முதல் தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அரசுக்கும் ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் மிச்சமாகிறது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்ட நாள் முதல் சிகிச்சைக்காக பலரும் வந்து அனுமதிக்கப்பட்டு குணமடைந்து செல்கின்றனர். இதனால் உள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து உபயோகத்திற்கும் தண்ணீர் அத்தியாவசியமாக உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு மருத்துவமனைக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் மருத்துவமனையின் தேவைக்கு நகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்தது. 24 ஆயிரம் லிட்டர் டேங்க் கொண்ட லாரிகளில் தினமும் தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டு வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் செலவழிக்கப்பட்டது. இது குறித்து தினமலர்நாளிதழில் 2024 ஆக. 19ல் செய்தி வெளியானது.
இதையடுத்து கடந்தாண்டு டிசம்பரில் மருத்துமவனை நிர்வாகத்தின் நிதியில் இருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நகராட்சி குடிநீர் திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிகள் முடித்து கூட்டுக்குடிநீர் குழாயில் இணைக்கப்பட்டது. இன்று முதல் (ஜன. 30) அரசு மருத்துவமனைக்கு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக இருந்த தண்ணீர் பற்றாக்குறை தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பூர்த்தி செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் மிச்சமாகும். இதே போல அரசு மருத்துவக்கல்லுாரியில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.