தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில் 56 மி.மீ., மழையளவு பதிவு

விருதுநகரில் 56 மி.மீ., மழையளவு பதிவு

விருதுநகரில் 56 மி.மீ., மழையளவு பதிவு


ADDED : செப் 20, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், செப். 21 –

விருதுநகரில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 8:00 மணி வரை அதிகபட்சமாக 56 மி.மீ., மழையளவு பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில், மாலையில் மழை என தொடர்ந்து சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்து பகல் நேர வெப்பத்தை தணித்து விடுகிறது.

நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 8:00 மணி வரை திருச்சுழியில் 8 மி.மீ., காரியாபட்டியில் 43.60, சாத்துாரில் 10, வத்திராயிருப்பில் 0.40, கோவிலான்குளத்தில் 3.20, வெம்பக்கோட்டையில் 4, அருப்புக்கோட்டையில் 17 மி.மீ., மழையளவு பதிவானது. இதில் அதிகபட்சமாக விருதுநகரில் 56 மி.மீ., மழை பெய்தது.

மேலும் விருதுநகரில் நேற்று மதியம் 3:30 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை மழை பெய்தது. இதே போல ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சாத்துார், அருப்புக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் முன்னேறி செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us