ADDED : செப் 07, 2025 02:43 AM
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வ.உ.சி., 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு, மாவட்ட தலைவர் பாண்டியராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட பொறுப்பாளர் பிச்சைகனி, பா.ஜ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, வி.சி.,நகரச் செயலாளர் இளந்தமிழ், இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இனிப்பு வழங்கி, அன்னதானம் நடந்தது.
*ஸ்ரீவில்லிபுத்துாரில் அவரது சிலைக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ மான்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் முருகன், காமராஜ், முன்னாள், இந்நாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
*சாத்துார் முக்கு ராந்தலில் காங்., சார்பில் வ.உ.சி. படத்திற்கு தொகுதி பொறுப்பாளர் ஜோதி நிவாஸ் நகர தலைவர் அய்யப்பன் வட்டாரத் தலைவர்கள் சுப்பையா மாரிமுத்து மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர துணைத் சேதுராமலிங்கம் நன்றி கூறினார்.