ADDED : செப் 08, 2025 06:18 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் வ.உ.சி. கலையரங்கத்தில் வீரக்கொடி வெள்ளாளர் உறவின் முறை சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளை வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.
வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வ.உ.சி. சிலையை திறந்து வைத்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் பேசியதாவது: சென்னையில் வ.உ.சி 5 ஆண்டுகள் வாழ்ந்த வீடு பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. அந்த வீட்டை சீரமைத்து நினைவு மண்டபமாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். துாத்துக்குடி விமான நிலையத்துக்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும். லோக்சபாவில் சிலை வைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புதிய நீதி கட்சி தென் மண்டல செயலாளர் வெங்கடாசலம் பிள்ளை, வீரக்கொடி வெள்ளாளர் உறவின்முறை தலைவர் மணிகண்டன் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.