ADDED : மார் 19, 2026 05:23 AM

விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சட்டசபை தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவிகள், மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஆனந்தி துவக்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். துண்டுப்பிரசுரங்களை வழங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
ராஜபாளையம் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அமர்நாத் கொடியசைத்து துவக்கினார். உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜி வ் காந்தி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகம் தொடங்கி காந்தி சிலை, கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, நகராட்சி அலுவலகம் பஞ் சு மார்க்கெட் வழியே முடிவடைந்தது.
