/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாக்காளர் பட்டியல் கலந்தாய்வுக் கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் கலந்தாய்வுக் கூட்டம்
ADDED : டிச 16, 2025 06:50 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்ரா முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விஜய் நெஹ்ரா தலைமையில் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் எந்த ஒரு தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்திது பற்றி கருத்து கேட்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ஆனந்தி, சப் கலெக்டர் முகமது இர்பான், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

